சிறையில் இருந்து வெளிவரும் மதுரோ: பெரும் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு.!
புதிய இணைப்பு
அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தற்போது தடுப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிக்கோலஸ் மதுரோவை ஏற்றிச் செல்லும் வாகனப் பேரணி தற்போது பயனத்தை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிக்கோலஸ் மதுரோ, இன்று (05) நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
முதலாம் இணைப்பு
அமெரிக்க படையினால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர் இன்று (5) நியூயோர்க்கில் உள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வெனிசுவேலா ஜனாபதி நிகோலஸ் மதுரோ மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார்.
நள்ளிரவு திடீர் தாக்குதல்
இந்தநிலையில், வெனிசுலா மீது கடந்த (03) நள்ளிரவு திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வெனிசுவேலாவின் தலைநகர் கராகாஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது.
வெனிசுலாவில் அமெரிக்க இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதயடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் கைது செய்து நாடுகடத்தியதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதையடுத்து, மதுரோ கைது செய்யப்பட்டு கண்கள் மற்றும் காதுகள் மூடியவாறு அழைத்துச்செல்லப்படும் புகைப்படத்தையும் ட்ரம்ப் பகிர்ந்திருந்தார்.
நீதிமன்றில் முன்னிலை
நியூயார்க்கில் உள்ள ஸ்டீவர்ட் ஏர் நேஷனல் கார்டு தளத்தில் மதுரோவை நாடு கடத்திச்செல்லப்பட்ட விமானம் தரையிறக்கப்பட்டது.

அமெரிக்க தடுப்புக் காவல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட நிக்கோலஸ் மதுரோ, அழைத்து சென்ற படை அதிகாரிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு உள்நுழைந்துள்ளார்.
இதன்போது, பதிவு செய்யப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |