வரலாற்றுச் சாதனை படைத்த சுழிபுரம் விக்டோரியா கல்லூரி
அண்மையில் வெளியாகிய 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ் (Jaffna) சுழிபுரம் விக்டோரியா கல்லூரியானது (Victoria College, Chulipuram) வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அந்தவகையில், வணிகப் பிரிவில் முகுந்தினி பிரான்ஸிஸ் தேவநாயகம் 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தினையும், கீர்த்தனா ஜெயரட்ணம் 3ஏ சித்திகளையும் 11வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
அத்துடன் உயிரியல் விஞ்ஞான பிரிவில் ஜக்சயன் யோகநாதன் 3 ஏ சித்திகளையும், லக்சிகா அம்பலவாணர் 3ஏ சித்திகளையும், செல்வன் மிதுனன் 2ஏ பி சித்திகளையும் பெற்று மூவரும் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
வரலாற்று சாதனை
இதனடிப்படையில், இந்த பெறுபேறுகளானது சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வரலாற்று சாதனை படைத்த பெறுபேறுகள் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சிறந்த பெறுபேறுகளை பெற்று பெற்றோருக்கும், பாடசாலைக்கும் மண்ணுக்கும், பெருமை சேர்த்த குறித்த மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |






ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 2 மணி நேரம் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
19 மணி நேரம் முன்