தலிபான்கள் ஹெலியில் உடலமா? 2008 இல் தப்பிய ஜோ பைடன்
அமெரிக்கா இராணுவம் விட்டுச் சென்ற Blackhawk ஹெலிகொப்டரில் ஒரு மனித உடல் தொங்கும் காட்சி என, வெளியான செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா விட்டுச் சென்ற இராணுவ ஹெலிகொப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வந்த ஆப்கான் நபரை கொன்று அவரது உடலை தொங்கவிட்டவாறு கந்தகார் நகரில் தலிபான்கள் ரோந்து சென்றதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இருப்பினும், இது தங்களது விமானப்படை எனவும், அதில் தொங்குபவர் தமது உறுப்பினர் ஒருவர் எனவும், அவர் தமது கொடியினை ஹெலிகொப்டரில் பறக்கச் செய்வதற்காக அவ்வாறு பயணம் செய்தார் என தலைப்பு இட்டு இந்த காட்சியை தலிபான்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதன் உண்மைத் தன்மை இது வரை தெரியவராத நிலையில், மேலைத்தேசத்து ஊடகங்கள் அதனை, மனித உடல் எனவும், தலிபான்களின் கொடூர ஆட்சி தொடங்கி விட்டதாகவும் பதிவிட்டுள்ளனர்.
இதன் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,