வியட்நாம் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தொடர்ந்தும் தடை!
People
Banned
Vietnam
SriLanka
By Chanakyan
கடந்த 14 நாட்களுள் வியட்நாமுக்கு சென்ற அனைத்து விமான பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்ற பயணிகள் மற்றும் இடைத்தங்கல் (Transit) பயணிகள் எவருக்கும் இவ்வாறு தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் நாளை முதல் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்