வியட்நாம் அதிபர் பதவி விலகினார்
வியட்நாம் அதிபர் வோ வான் துவோங் பதவி விலகியுள்ளதாகவும் அவரின் பதவி விலகலை அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று (21) அங்கீகரித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
53 வயதான வோ வான் துவோங், ஒரு வருடகாலமே அதிபராக பதவி வகித்த நிலையில் நேற்று (20) நடைபெற்ற, ஆளும் பொதுவுடமைக் கட்சிக் கூட்டத்தின் பின்னர் அதிபர் துவோங் பதவி விலகியதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
வியட்நாம் அதிபரின் பதவி விலகலுக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
அங்கீகாரம் வழங்கிய நாடாளுமன்றம்
இந்நிலையில், இன்று கூடிய வியட்நாம் நாடாளுமன்றம், அதிபர் துவோங்கின் பதவி விலகலுக்கு அங்கீகாரம் வழங்கியது.
கட்சியின் விதிகளை துவோங் மீறியதுடன், கட்சின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் செயற்பட்டுள்ளார் என வியட்நாமின் பொதுவுடமைக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும், துவோங்கின் சொந்த மாநிலத்தில் ஊழல் சர்ச்சையொன்று தொடர்பாக அவர் பதவி விலகியுள்ளார் என குறிப்பிடப்படுகிறது.
துவோங்குக்கு முன்னர் அதிபராக பதவி வகித்த அதிபரும் ஊழல் சர்ச்சை காரணமாக பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்கத்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |