கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய்! பகிரப்படும் காணொளி
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காணொளி அழைப்பில் உரையாடி ஆறுதல் தெரிவித்ததாக காணொளியொன்று இந்திய ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.
இவ்வாறு த.வெ.க தலைவர் விஜய் உரையாடும் காணொளி தொடர்பிலான கருத்ழதை இந்திய ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.
கடந்த மாதம் 27 ஆம் திகதி தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட41 பேர் உயிரிழந்தனர்.
பகிரங்க மன்னிப்பு
இவ்விடயம் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணத்திற்கு கறுப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உறவுகளை இழந்து மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் குடும்பத்தினருடன் விஜய் காணொளி அழைப்பில் உரையாடியுள்ளார்.
இதன்போது, குடும்ப உறவுகளுக்கு ஆறுதல் தெரிவித்து அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.
அச்சத்தில் தி.மு.க
இதேவேளை, தமிழக வெற்றிக் கழகம் கரூர் சம்பவம் தொடர்பிலான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றுமாறு கோரி வரும் சூழலில் தமிழக அரசாங்கமும் ஏனைய கட்சிகளும் அதற்கு அவசியம் இல்லை என கூறி வருவதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சி.பி.ஐக்கு கரூர் விவகாரம் மாற்றப்படுமாக இருந்தால் அது ஆட்சியில் இருக்கும் தமது அரசாங்கத்திற்கு பாரதுாரமாக இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் எண்ணுவதாக தமிழகத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காணொளி
https://x.com/polimernews/status/1976106483478925411
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
