9ஆம் திகதி ஜனநாயகன் வெளியாகாது - சோகத்தில் விஜய் ரசிகர்கள்
விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் வெளியீடு தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள.
அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வமாக அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இந்திய தமிழ் சினிமாவில் அரசியல் தலையீடு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
அந்த அறிக்கையில், நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 9ஆம் திகதி திரையிடப்படவிருந்த இந்த திரைப்படம், கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழல்கள் காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
புதிய வெளியீட்டுத் திகதி
திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில், இத்தாமதம் குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் KS அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
“சென்சார் மட்டும் தரலேன்னா.. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தாமதித்தால், அது பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என்று அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அழகிரி, திமுக கூட்டணியில் இருப்பதால், இக்கருத்து அரசியல் ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தில் அரசியல் கருத்துகள் அதிகம் இடம்பெற்றுள்ளதால், தாமதம் வேண்டுமென்றே என்ற சந்தேகத்தை த.வெ.க தரப்பு எழுப்பியுள்ளது.
இந்த முடிவு தமக்கும் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள தயாரிப்புத் தரப்பு, ரசிகர்கள் காட்டி வரும் அதீத ஆர்வத்தையும் உணர்வுகளையும் மதிப்பதாகவும், தொடர்ந்து பொறுமையுடன் ஆதரவு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பானது படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், புதிய திகதி அறிவிக்கப்படும் வரை காத்திருக்குமாறு படக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் சிக்கலால் படத்தின் வெளியீட்டில் பிரச்சினை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும் 5 மணி நேரம் முன்