தென்னிந்திய திரைத்துறையில் பாடவேண்டும் - மனம் திறந்த சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா
இந்தியாவின் (India) பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 போட்டியில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா பங்குபற்றியிருந்தார்.
இந்தநிலையில் அவரது பாடல் சுற்றானது நிறைவடைந்த நிலையில் அவர் கடந்த 22 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பிய போது யாழ்ப்பாண மக்கள் அவருக்கு பாரிய வரவேற்பளித்துள்ளனர்.
“2 வயதிலிருந்தே இசைத்துறையில் கால்பதித்த பிரியங்கா சிறுவயதில் கோயில் கச்சேரிகளில் பாடியதுடன் கடந்த வருடம் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பாடிய பின்னரே நிறைய பேருக்கு தெரிந்த ஒருவராக மாறியுள்ளார்.
இது குறித்து பிரியங்கா தெரிவிக்கையில்,
சங்கீதத்தில் உள்ள நுணுக்கங்கள் உட்பட பல விடயங்களை சூப்பர் சிங்கர் மேடையில் கற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெரிய பாடகியாக வேண்டும் என்பதுடன் தென்னிந்திய திரைத்துறையில் பாடவேண்டும் என்பதே தனது அடுத்த கனவு என குறிப்பிட்ட பிரியங்கா ஒரு விஞ்ஞானியாக வர வேண்டும் என்பதே தனது எதிர்கால இலட்சியம் எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டபோது கிடைத்த அனுபவங்கள், சவால்கள், எதிர்கால இலக்குகள் குறித்து தெரிவித்த விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க......
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
