விரைவில் கரூர் செல்கிறார் விஜய்..! மக்களுக்கு வைப்பிலிடப்பட்ட 20 லட்சம்
அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம் என தவெக (TVK) தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய் (Vijay) பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் தலா ரூ.20 இலட்சம் இழப்பீடு வழங்கி உள்ளது.
தாங்க முடியாத வேதனை
விஜய் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.
நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக ரூ.20 இலட்சத்தை ஆர்.டி.ஜி.எஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளோம். ரூ.20 இலட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம்.
இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம் என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
