முன்னாள் ஜனாதிபதி மகிந்த வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு
மக்களின் அன்பு மற்றும் தொடர்புகளே தமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தங்காலை கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக பதிவில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய குறித்த பதிவில் "மக்களுடன் சுதந்திரமாக இருப்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். மக்களுடன் இருப்பது ஒருபோதும் எனக்கு சோர்வை ஏற்படுத்தாது. இது ஒரு பழக்கம்; ஒரு பிணைப்பு; அனைவருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு.
மக்களுக்கு நன்றி
மக்களின் மனதில் உருவாகும் நம்பிக்கை மற்றும் பாசம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் மனித உறவுகளே, ஒரு மக்கள் தலைவரின் சகிப்புத்தன்மையையும், தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் வளர்க்கிறது.
மக்கள் மத்தியில் இருப்பது என்னை உடலால் மேலும் பலப்படுத்துகிறது; மனதை ஆரோக்கியமாக்குகிறது.
எப்போதும் ஒரே மாதிரி வந்து நலம் விசாரிக்கும், அன்புடன் உரையாடும் பிரியமான மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அரசியல் சகாக்களையும் நினைவுகூருகிறேன்; உங்கள் அனைவருக்கும் நன்றி," என மகிந்த ராஜபக்ச அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
