அமெரிக்க நிறுவனத்தால் அதிரும் கொழும்பு அரசியல் - மைத்திரியுடன் கைகோர்க்கும் அரசின் பங்காளி கட்சிகள்
கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்கை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு அளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆளும் தரப்புக்குள் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அண்மையில் இந்த மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு கையளிக்கும் ஒப்பந்தம் நள்ளிரவு நேரம் செய்து கொள்ளப்பட்டதாகவும் இதனையடுத்து அமெரிக்க முதலீட்டாளர்கள் வெளியேறிய கையோடு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவும் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திஸநாயக்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சியில் உள்ள 10 தலைவர்கள் நேற்று இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து முக்கிய பேச்சை நடத்தியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள மைத்திரியின் இல்லத்தில் நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விமல் அணியினர் கொழும்பில் நேற்று முன்தினம் மாலை கூடி பேச்சு நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் விமல் அணி நேற்றுறு இரவில் மைத்திரியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விமல் அணியை இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலக அறையில் நண்பகல் 12 மணிக்கு சந்திக்க வருமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.