தேரர் கடத்தல் விவகாரம்! பகீர் தகவலை வெளியிட்ட வேதிகம விமலதிஸ்ஸ தேரர்
தன்னை கடத்திச் சென்ற போது ஜனாதிபதியின் மிரிஹான வீட்டில் அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்ததாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் வேதிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த பொதுத் தேர்தலில் பின் என்னை கடத்திச் சென்றது சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழிநடத்திய குழுவாகும்.
ஜனாதிபதியின் மிரிஹான வீட்டில் வைத்தே இந்த கடத்தல் இடம்பெற்றது. கடத்தல் இடம்பெற்ற போது அத்துரலியே ரத்தன தேரர் உள்ளிட்ட குழுவினர் அங்கு இருந்தனர்.
என்னை கடத்திச் சென்று ஆவணங்கள் சிலவற்றில் கையொப்பம் வாங்கினர். இதன்போது வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தல் விடுத்தனர்.
இந்த நிலையில் அரச உத்தியோகத்தர் என்ற அடிப்படையில் தேசபந்து தென்னகோன் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.