முஸ்லிம் பெண் ஊழியர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Human Rights Council Batticaloa Law and Order
By Farook Sihan Aug 11, 2026 10:55 AM GMT
Report

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடையைக் காரணம் காட்டி, கடமை பொறுப்பேற்பதைத் தடுத்த விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக, நேற்று (10) மாலை கல்முனை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஐந்து முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்பிரச்சினையை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்வது தொடர்பில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரையும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரியையும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் நேரில் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் : அரசாங்கத்திடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் : அரசாங்கத்திடம் இம்ரான் எம்.பி கோரிக்கை

அடிப்படை உரிமைகள் மீறல் 

எனினும், குறித்த சந்திப்பின் போது நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் வேறு வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே இதற்கான சிறந்த தீர்வாகும் என்ற நிலைப்பாட்டை அதிகாரிகள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் பெண் ஊழியர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு | Violation Of Rights Of Muslim Female Employees

பாதிக்கப்பட்ட உதவி சுகாதார உத்தியோகத்தர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், அவர்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று அல்லது நாளை, அடிப்படை உரிமை மீறலுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் அனுப்பப்படவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து முறைப்படியான சட்டரீதியான நடவடிக்கைகளும், விசாரணைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இவ்விடயம் தொடர்பாக இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!

சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு!

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி

அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024