போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தவிர்க்கப்பட வேண்டும்! கனேடிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்
போராட்டக்காரர்கள் மீதான வன்முறை
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தவிர்க்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அதிகாரிகள் பொறுமையுடனும், வன்முறைகளைத் தவிர்த்தும் நடந்து கொள்வது மிகவும் நன்று என தெரிவித்துள்ளார்.
மேலும் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் நடைபெறும் விடயங்கள் குறித்து அறிந்தேன். தற்போது இது ஏன் நடைபெறுகின்றது என்று அறியேன்.
அதிகாரிகள் பொறுமையுடனும், வன்முறைகளைத் தவிர்த்தும் நடந்து கொள்வது மிகவும் நன்று என்றும் டேவிட் மெக்கின்னன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hearing what is happening at the Galle Face protest site. Not sure why this is happening now. It is crucial the authorities act with restraint and avoid violence.
— David McKinnon (@McKinnonDavid) July 21, 2022
நள்ளிரவில் போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதோடு அவர்களின் கூடாரங்கள், பாதாகைகள் என அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.
இதன் போது பல போராட்டக்கராக்கள் பலத்த காயங்களுக்கு உள்ளானதாவும், அவர்களை மருத்துவமனை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் மேற்கண்டவாறு தெரிவித்தார்
