நாடாளுமன்றை தாக்க சதி - இரட்டிப்பாக்கப்பட்டது பாதுகாப்பு
Sri Lanka Police
Sri Lanka Parliament
Sri Lanka
By Sumithiran
நாடாளுமன்றத்தை தாக்க வன்முறை கும்பல் ஒன்றின் முயற்சி அம்பலமானதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் சாஜன்ட் தலைமையில் இடம்பெற்றதுடன், அக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா பகுதியில் கடற்படை கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் காவல்துறை ரோந்து பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் காவல்துறைக்கு மேலதிகமாக, முப்படைகளின் அதிகாரிகளும் தொடர்ந்தும் அனுப்பப்பட உள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடு, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் செயல்படுத்தப்படவுள்ளது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்