மட்டு நகரில் திறக்கப்பட்ட 12அடி உயரம் கொண்ட சுவாமி விபுலானந்தர் சிலை
உலகின் முதலாவது தமிழ் பேராசிரியர் என்ற புகழையும் முத்தமிழ் வித்தகர் என்ற பெருமையினையும் கொண்ட சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை மட்டக்களப்பில் (Batticaloa) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
12அடி உயரம் கொண்ட இந்த கற்சிலை இன்று (18.05.2025) மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது.
சுவாமி விபுலானந்தர்
சுவாமி விபுலானந்தர் நூற்றூண்டு சபையின் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் சிறிமத் சுவாமி அக்ஷராத்மானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரீனா முரளிதரன், மட்டக்களபபு மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், பிரதேச செயலாளர்கள்,முன்னாள் அரசாங்க அதிபர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து சுவாமியின் திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டதுடன் யாழ் மற்றும் யாழ் நூல் என்பனவும் திறந்துவைக்கப்பட்டதுடன் சுவாமி விபுலானந்தர் நினைவுக்கல் படிகமும் திறந்து வைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







