நாடு முழுவதும் தீவிரமடையும் வைரஸ் தொற்று! குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கை
கடந்த சில நாட்களில் நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த தொற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் மகேஷக விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்திலும் ஆண்டின் இறுதியிலும் இந்த தொற்றுநோய் நிலைமை மிகவும் அதிகமாக காணப்படும் எனவும் கூறியுள்ளார்.
திடீர் காய்ச்சல்
பகல்நேர குழந்தை பராமரிப்பு மையங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் அரச, தனியார் பாடசாலைகளில் உள்ள குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"இந்த நோய் பல வடிவங்களில் ஏற்படலாம். பெரும்பாலான குழந்தைகள் திடீர் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கும் அதே வேளையில், சில குழந்தைகள் ஆஸ்துமா உள்ள குழந்தைகளில் சளி, காது தொற்று, சைனசிடிஸ் அல்லது மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்.
இளம் குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடும். இது சில நேரங்களில் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்
சில சந்தர்ப்பங்களில், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள குழந்தைகள் நிமோனியா மற்றும் கடுமையான சுவாச சிக்கல்களுக்கு உள்ளாக கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளில் ஏற்படும் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்” என தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 3 மணி நேரம் முன்
