தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் விதுலக்ஷன்
arrest
investication
vithulaksan
By Vanan
கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி திருகோணமலையில் வைத்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சண்முகராசா விதுலக்ஷன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா காரணமாக இரண்டு வழக்குகள் மட்டும் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விதுலஷனின் வழக்கு விசாரணைகளை மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு குடும்பத்தார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் சிறையில் இருப்பதுடன் அவர்களது விசாரணைக்கு கொரோனாவும் பாரிய சவாலாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.