என் மீதான குற்றங்களை நிரூபிக்காவிட்டால் சாணக்கியன் அரசியலில் இருந்து ஒதுங்குவாரா! வியாழேந்திரன் பகிரங்கம்
“நான் இலஞ்சம் வாங்கினேன், கல்லடி கடற்கரையிலிருந்து தப்பியோடினேன் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்குவாரா” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S. Viyalendiran) கேள்வியெழுப்பியுள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று (05) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக நடிக்கும் நாடகங்கள் மக்கள் மத்தியில் சொல்லும் பொய்களை மக்கள் நம்பமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே குடும்பம் நடாத்தும் சாணக்கியன் உண்மையினை அறிந்து பேசவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவரின் வங்குரோத்து அரசியலுக்காக பொது வெளியில் சாணக்கியன் இவ்வாறு பேசுவதாகவும், இதனை நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் எச்சரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |