புடினுக்கு வடகொரியாவில் காத்திருந்த வரவேற்பு
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இன்றையதினம் வடகொரியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடகொரியாவுக்கு (North Korea) விஜயம் செய்யுமாறு புடினை வடகொரிய அதிபர் கிம் ஜொங்-உன் (Kim Jong Un) அழைத்திருந்த நிலையில், புடின் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
சிவப்பு கம்பள வரவேற்பு
இந்த நிலையில், வடகொரியாவுக்கு விஜயம் செய்துள்ள புடினுக்கு அதிபர் கிம், விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளார்.
அதனையடுத்து, இரு நாட்டு அதிபர்களும் ஒரே மகிழூந்தில் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.
அத்துடன், அவர்கள் சென்ற மகிழூந்தானது, ரஷ்யாவில் (Russia) தயாரிக்கப்பட்டது என்பதுடன் கடந்த ஆண்டு கிம்முக்கு புடின் பரிசாக வழங்கியதாகும்.
முக்கியமான பிரச்சினை
இறுதியாக கடந்த 2000 ஆண்டு புடின் வடகொரியாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், தற்போது 24 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்ய அதிபரும் வட கொரிய அதிபரும் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுவடைவது மற்றும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |