மீண்டும் அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின்
Vladimir Putin
Election
World
Russia
By Shadhu Shanker
ரஷ்யாவின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவல்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மேலும், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ரஷ்யாவில் பெரிய மாநாடொன்று நடைபெறவுள்ளது.
அதன்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கலாம் என புடினின் நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நீண்டகால அதிபர் பொறுப்பு
அடுத்த ஆண்டு மார்ச் 24ஆம் திகதி ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,1999ஆம் ஆண்டின் கடைசி நாளில் போரிஸ் யெல்ட்சின் அதிபர் பதவியை புடினிடம் ஒப்படைத்தார், அன்றிலிருந்து மிக நீண்டகாலமாக அதிபர் பொறுப்பில் புடின் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்