இங்கிலாந்து பிரதமருக்கு பலத்த அடி!!
இங்கிலாந்து பிராந்தியத்தில் 59,610 புதியதொற்றுகள் மற்றும் 150 கொரோனா மரணங்கள் பதிவாகிய பின்னணியில், நேற்றிரவு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு (Boris Johnson) மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பொறிஸ் ஜோன்சனின் கென்சர்வேடிவ் தரப்பில் 99 நாடாளுமன்றஉறுப்பினர்கள் தமது அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளமையே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொறிஸ் ஜோன்சன் தனது பதவிகாலத்தில் மிகப்பெரிய கிளர்ச்சியை சந்தித்த்துள்ளர்.
இந்தப் பின்னடைவை தவிர்க்கும் வகையில் வாக்கெடுப்புக்கு முன்னர் தனது கன்சர்வேடிவ் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுடன் அசர் தனது இறுதி சமரச முயற்சியை மேற்கொண்ட போதிலும் அது பலன் அளிக்கவில்லை எனினும எதிர்கட்சியின் ஒத்துழைப்புடன், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டம் அங்கிகரிக்கபட்டுள்ளது.
இதன்படி இரவு விடுதிகள், விளையாட்டுப் போட்டிகள் உட்பட்ட பெரிய அரங்க நிகழ்வுகளில் நுழைவதற்கு கொரோனா பாஸ் எனப்படும் சான்றிதழை காட்ட வேண்டிய நியதி நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் அடிப்படையில் ஆசனங்கள் அற்றவகையில் 500 க்கும் மேற்பட்டோர் பங்கெடுக்கும் இடங்கள், 4,000 க்கும் மேற்பட்ட மக்கள் அமர்ந்திருக்க கூடிய வெளிப்புற அரங்குகள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் பங்கெடுக்கும் சகல இடங்களுக்கும் இந்த புதிய விதிகள் பொருந்தும்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது தரப்பில் சந்தித்த இந்த மிகப்பெரிய கிளர்ச்சி குறித்து குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி மற்றும் தொழிற்கட்சி தலைவரான சேர் கெயர் ஸ்டார்மர், ஏற்கனவே சேதமடைந்துள்ள பிரதமரின் அதிகாரத்திற்கு இது நல்ல அடி என வர்ணித்துளளார்.
99 உறுப்பினர்களின் இந்தக் கிளர்ச்சி ஜோன்சனுக்கு அடுத்த ஆண்டு மிகப்பெரிய ஒரு தலைமைத்துவ சவாலை எதிர்நோக்கப்போவதை கட்டியம் கூறியுள்ளது.
குறிப்பாக இந்தக் கிளர்ச்சி 70 உறுப்பினர்களுடன் இடம்பெறும் எனக் கணிக்ப்படட போதிலும் அதனை விட மிகப் பெரியதான 99 உறுப்பினர்களுடன் இடம்பெற்றமை ஜோன்சனின் அதிகாரம் குறைந்து வருவதை காட்டியுள்ளது.
புரெக்சிற் பேசுபொருளுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மார்கரெட் தாட்சர் காலத்துக்கு பின்னர் கன்சர்வேடிவ் மிகப்பெரிய பெரும்பான்மைபெற்ற ஜோன்சன் தற்போது உட்கட்சி சிக்கலை எதிர்கொள்கிறார்.