கனடாவில் ஆறு இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு
canada
Vulnerability
By Vasanth
கனடாவில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனாவுக்கு 15ஆயிரத்து 865 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 11ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டதோடு 150பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் , 80ஆயிரத்து 822பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 711பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
3ம் ஆண்டு நினைவஞ்சலி