வாக்னர் தலைவர் ஆபிரிக்காவில் - ஆதாரப்படுத்தும் புதிய காணொளிகள்
ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் பிரிவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ஆபிரிக்காவில் இருப்பதை ஆதாரப்படுத்தும் புதிய காணொளிகள் வெளிவந்துள்ளன.
நைஜரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஆதரவைப்பெற்ற அரச தலைவர் காவலில் வைக்கபட்ட பின்னர் இராணுவ சதிப்புரட்சியாளர்கள் ரஷ்ய ஆதரவை கோரியிருந்தனர்.
இந்நிலையில், ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து வாக்னரின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் ஆபிரிக்காவில் இருப்பதை ஆதாரப்படுத்தும் புதிய காணொளிகள் வெளிவந்துள்ளன.
வாக்னரின் சேவை

ரஷ்யாவின் புகழை அனைத்து கண்டங்களிலும் இன்னும் பெரியதாக ஆக்கவும் ஆபிரிக்காவை இன்னும் சுதந்திரமாக ஆக்கவும் வாக்னரின் சேவை வழங்கப்படுவதாக அவர் அந்தக் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரிகோஜினின் துருப்புக்கள் ஏற்கனவே மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு உட்பட்ட நாடுகளில் கூலிக்காக பணியாற்றும் நிலையில் தனது வாக்னர் வலையமைப்பு ஆபிரிக்க கனிமங்களை ஆராய்வதாகவும், இஸ்லாமிய ஜிகதிகள் மற்றும் மாபியா குற்றவாளிகளை எதிர்த்துப் போராடுவதாகவும் பிரிகோஜின் கூறும் இந்தச் செய்தி வந்துள்ளது.