யாழில் பதிவான பல கொள்ளை சம்பவங்கள்: காவல்துறை வலையில் சிக்கிய திருடன்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Dec 09, 2024 11:05 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில்(Jaffna) 300 தங்கப்பவுனுக்கும் மேற்பட்ட நகைகளையையும் சுமார் 60 லட்சம் ரூபாய் பணத்தினையும் கொள்ளையிட்ட திருடனை கைது செய்துள்ளதாக யாழ். உதவி காவல்துறை அத்தியட்சகர் ஜருள் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் இன்றையதினம்(09.12.2024) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

குறித்த கைது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மானிப்பாய் போன்ற காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2022 ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தினை திருடிச் செல்லும் திருடன் குறித்து நாங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு இருந்தோம்.

சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி : நேரம் பார்த்து காய் நகர்த்தும் இஸ்ரேல்

சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி : நேரம் பார்த்து காய் நகர்த்தும் இஸ்ரேல்

கொள்ளைச் சம்பவம்

இது தொடர்பான தகவல்களை திரட்டி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக, வடக்கு மாகாண பிரதீப் காவல்துறைமா அதிபர் திலக்சீய தனபால மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா காளிங்க ஜயசிங்க ஆகியோர் எனது தலைமையிலான குழு ஒன்றினை நியமித்தனர்.

அந்த வகையில் யாழ். மாவட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மற்றும் யாழ். பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு அதிகாரிகளை நியமித்து இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கணினி மூலமான வரைபடத்தை தயாரித்து அது தொடர்பாக விசாரணை செய்து குறித்த திருடனை கொழும்பில் வைத்து கைது செய்தோம்.

யாழில் பதிவான பல கொள்ளை சம்பவங்கள்: காவல்துறை வலையில் சிக்கிய திருடன் | Wanted Suspect Arrested For 12 Thefts In Jaffna

இவர் சுமார் 2022ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து களவுகளை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

ஆரம்பத்தில் இருவருடன் இணைந்து திருடி வந்த இவர், பின்னர் தனியாக துவிச்சக்கர வண்டியில் சென்று திருட்டுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

ரணிலுக்கு எதிராக கிளம்பிய புதிய சர்ச்சை: அநுர உட்பட முக்கிய தரப்புகளுக்கு பறந்த கடிதம்

ரணிலுக்கு எதிராக கிளம்பிய புதிய சர்ச்சை: அநுர உட்பட முக்கிய தரப்புகளுக்கு பறந்த கடிதம்

காவல்துறை விசாரணை 

கைதான சந்தேக நபர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து திருட்டுக்களை மேற்கொண்டு விட்டு அந்த நகைகளை கொழும்பில் விற்பனை செய்து வந்துள்ளார். அந்தவகையில் அவருடன் மேலும் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து தடுப்பில் வைத்திருக்கின்றோம்.

இதுவரை யாழ். காவல் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 12 திருட்டு சம்பவங்கள் குறித்து சந்தேக நபர் தகவல் வழங்கியுள்ளார். அதுபோல கோப்பாய் பொலிஸ் பிரிவிலும் 10க்கு மேற்பட்ட களவுகள் குறித்து தகவல் தந்துள்ளார். 

யாழில் பதிவான பல கொள்ளை சம்பவங்கள்: காவல்துறை வலையில் சிக்கிய திருடன் | Wanted Suspect Arrested For 12 Thefts In Jaffna

அத்துடன், இறுதியாக மேற்கொண்ட இரண்டு திருட்டுகளும் அச்சுவேலி காவல் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக காணப்படுகின்றது.

அதன்படி, இவர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட களவுகளின் அடிப்படையில் 66 மில்லியன் பெறுமதியான உடைமைகளை திருடியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனவே யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற மக்கள் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறும் போது, திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை எமக்கு சரியாக வழங்கும் பட்சத்தில் எங்களால் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். 

மேலதிக தகவல் - கஜிந்தன்

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி! டக்ளஸின் யோசனைக்கு சந்திரசேகர் விசனம்

இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி! டக்ளஸின் யோசனைக்கு சந்திரசேகர் விசனம்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்