அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் குறித்து பேராசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை
மன்னாரில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் காரணமாக வலசை பறவைகளிற்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என கொழும்பு பல்கலைகழக பேராசிரியர் சம்பத் எஸ் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வலசை பறவைகளிற்கான முக்கியமான நுழைவாயிலாக மன்னார் காணப்படுகின்றது எனவும் அதானியின் காற்றாலை மின்திட்டத்தினால் பறவைகளிற்கு பேரழிவு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காற்றாலை மின்திட்டத்திற்காக உருவாக்கப்படும் ஒவ்வொரு கோபுரமும் 120 மீற்றர் உயரம் கொண்டதாக காணப்படும் மேலும் 96 மீற்றர் நீளமான சுழலும் கத்திகள் காணப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காற்றாலைகள் சுற்றுச்சூழலிற்கு உகந்தவையா
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது
''காற்றாலைகள் மூலம் உமிழ்வுகள் வெளியாவதில்லை. அவை அதிக சத்தத்தை எழுப்புவதில்லை. எனினும் இந்த காற்றாலைகள் சுற்றுச்சூழலிற்கு உகந்தவையா பொருளாதாரத்திற்கு பயன்படுமா என்பது தொழில்நுட்பத்திற்கு அப்பாற்பட்ட பல வெளிக்காரணகளில் தங்கியுள்ளது.
உத்தேச நிர்மாணத்தளம் பறவைகளின் புலம்பெயர் பாதையில் உள்ளன. கொழும்பு பல்கலைகழகம் கடந்த நான்கு வருடங்களாக செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தியும் ஜிஎம்எஸ் மற்றும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பறவைகளின் இடம்பெயர்வு பாதைகள் குறித்த விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.
இந்த தரவுகள் சுற்றுசூழல் நன்மைக்கு மாத்திரமல்லாமல் சிவில் விமானப்போக்குவரத்து ஆணையம் போன்றவற்றிற்கும் உதவுகின்றன.
எங்கள் ஆராய்ச்சி மூலம் நாங்கள் இலங்கை பறவைகளின் இடம்பெயர்வு குறித்து பல விடயங்களை அறிந்துகொண்டோம். உதாரணத்திற்கு சில மன்னார் பறவைகள் ஐரோப்பாவில் முட்டையிட்டு ஆறுமாதங்களின் பின்னர் இலங்கை திரும்புகின்றன. இது 25000 கிலோமீற்றர் ஆகும்.
பறவைகளின் இடம்பெயர்வு பாதைகள்
சில பறவைகள் பனி ஆரம்பித்ததும் ஆர்ட்டிக்கில் முட்டையிடுகின்றன பின்னர் அவை தங்கள் குஞ்சுகளுடன் இலங்கை திரும்புகின்றன. 30 நாடுகளில் இருந்து 15 மில்லியன் பறவைகள் இடம்பெயர்கின்றன.
பறவைகள் எட்டு இடம்பெயர்வு பாதைகளை பின்பற்றுகின்றன இதில் ஒன்று மத்திய ஆசியாவில் அமைந்துள்ளது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை வடபகுதி குளிர்காலத்தை அனுபவிக்கும்போது 4 மில்லியன் பறவைகள் இந்த பாதையை பயன்படுத்தி தென்பகுதிக்கு இடம்பெயர்கின்றன பின்னர் மார்ச் ஏப்ரலில் வடபகுதிக்கு மீண்டும் செல்கின்றன.
இலங்கை தான் கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கைகள் மூலம் இந்த பறவைகள் தனது பகுதிக்குள் உள்ள வேளை அவற்றை பாதுகாப்பது என உறுதி வழங்கியுள்ளது. இந்த பறவைகள் இலங்கைக்குள் நுழைவதற்கு மூன்று முக்கிய பாதைகளை பயன்படுத்துகின்றன.
ஒன்று கொழும்பு சிலாபம் மற்றையது மன்னார் இன்னொன்று யாழ்ப்பாணம். இந்த மூன்று முக்கியமான பாதைகளில் அனேகமான பறவைகள் மன்னார், யாழ்ப்பாணம் ஊடாக உள்ளே நுழைகின்றன.
மன்னார் ஊடாக வரும் பறவைகள்
யாழ்ப்பாணத்தின் ஊடாக உள்ளே நுழையும் பறவைகள் சீனா மற்றும் ரஸ்யாவிலிருந்து வருகின்றன. ஆர்ட்டிக் மற்றும் சிந்து சமவெளியிலிருந்து வரும் பறவைகள் மன்னாரை விரும்புகின்றன. அவசரமாக தரைக்கு செல்லும் வழியில்லாததால் பறவைகள் கடல் பாதைகளை அடிப்படையாக வைத்து நீண்டதூரம் பயணிக்கின்றன.
இலங்கைக்கு வரும் பறவைகளிற்கான பாதுகாப்பான பாதை ஆதாம்பாலமே. இதன் காரணமாக மில்லியன் கணக்கான பறவைகள் வருடந்தோறும் மன்னார் ஊடாக இலங்கைக்குள் நுழைகின்றன.
சூழல் விஞ்ஞான கண்ணோட்டத்தில் இலங்கையின் பல பகுதிகள் மிகவும் முக்கியமானவை, பறவைகளின் பாதையை இலகுவாக்குவதால் மன்னார் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இந்த பறவைகள் பறக்கும் பாதையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் சுழலும் 96 மீற்றர் சுழல் கத்திகள் கொண்ட 52 காற்றாலைகளை நிறுவ உள்ளனர்'' என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |