கறுப்பை வெள்ளையாக மாற்ற உதவும் சில புலம்பெயர் கேடிகள்!
தமிழ் நாட்டில் சி(ப)ல அரசியல் தலைவர்கள், தலைவர்களின் உறவினர்கள், கட்சிகள், பினாமிகள், பெருமளவு கொள்ளையடிப்பதும், கறுப்பு பணம் சம்பாதிப்பதும், அப்படிச் சம்பாதித்த கறுப்புப் பணத்தை பதுக்கிவைப்பதும் யாவரும் அறிந்த ரகசியம்.
பதுக்கிவைக்கப்படும் கறுப்புப் பணத்தை பல வழிகளால் வெள்ளையாக மாற்றுவார்கள் அரசியல்வாதிகளின் பினாமிகள்.
வெளிநாடுகள் ஊடாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது என்பதும் அதில் ஒரு வழியாம்.
வெளிநாடுகளில் என்ன கோதாரி செய்து கறுப்பை வெள்ளையாக மாற்றித் தொலைக்கின்றார்கள் என்று தெரியாது.. ஆனால் சில புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இந்த விளையாட்டுக்கு துனைபோவதாக பேச்சடிபடுகிறது.
குறிப்பாக பிரித்தானியாவிலும், பிரான்சிலும் இந்த சட்டவிரோத காரியத்துக்கு பலர் துணைபோய் கொழுத்த காசு சம்பாதித்துவருவதாகத் தெரியவருகின்றது.
காவனம். கேடித்தனமான இந்தச் செயல் புலம்பெயர் நாடுகளில் ஒரு மிகப் பெரிய குற்றம்.
பிடிபட்டால் வாழ்க்கையே நாசமாகப் போய்விடும்.
(சொன்னா எந்தப் பயல் கேட்கிறான்!! ..)