இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அபாய அறிவிப்பு
Ceylon Teachers Service Union
Sri Lankan Schools
By Sumithiran
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 2,000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் அபாய அறிவிப்பை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகள்
இதேவேளை வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் பி எச் எம் சாள்ஸ் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரிய நியமனம்
அண்மையில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 7800 பேரும் பட்டதாரிகளைச்சேர்ந்த 5500 பேரும் ஆசிரிய பணிக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி