காற்றின் தரம் மோசம் : கர்ப்பிணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில்(sri lanka) அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் காற்றின் மாசுபாடு தாய்மார்களின் கருவைக்கூட பாதிப்படையச் செய்யும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சுவாச வைத்தியர் பேராசிரியர் துமிந்த யசரத்னே.
இந்த காற்று மாசுபாடு கருவின் எடையைக் குறைப்பதுடன் புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்பு
அத்துடன் கர்ப்பிணித்தாய்மார்களின் பிரசவ காலத்தில் சிசு இறந்த நிலையில் பிறக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளில் 40% பேர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாகவும் பேராசிரியர் யசரத்னே குறிப்பிட்டுள்ளார்.
அவதானத்துடன் செயற்படவேண்டும்
எனவே இந்த காற்று மாசுபாடு தொடர்பில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பேராதனை மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசுபாட்டின் தாக்கம் குறித்து ஆய்வொன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தீவிர காலநிலை மாற்றத்தால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுவதாக அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன்படி தீவிர காலநிலை மாற்றத்தால் நீண்டகால கர்ப்பத்துக்கு பெண்கள் ஆளாவதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்