தீவிரமடையும் தென் மேல் பருவபெயர்ச்சி! நாளை 100mm மழைவீழ்ச்சி குறித்து எச்சரிக்கை
தென்மேல் பருவப்பெயர்ச்சி தீவிரமடைவதால், நாளை நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கு மேல் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நாளை (06) முதல் அதிகரித்து அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தன்னிசை்சையாக திறப்பு: தாழ்நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
பலத்த மழை
''மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், வட மத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய சேதங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |