வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகல மாவட்டத்தில் நாளை (01.08.2026) முதல் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியிருப்பாளர்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், பகலின் வெப்பமான நேரத்தில் கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நாளைய வானிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,
வெப்பம் குறித்த வானிலை
01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 ஓகஸ்ட் 31ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.
சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க நாளை (01ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் கல்பிட்டி, தலாவ, சிங்காரகம, கல்கடவல, நாச்சதுவ, படிகாரமடுவ, கோமரன்கல்ல மற்றும் வெருகல் ஆகிய வெப்பம் அதிகமாக இருக்கும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |