வெள்ள நிலைமை குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
Floods In Sri Lanka
By Laksi
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெள்ள நீரில் விளையாடுவது மற்றும் நீந்துவதினை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
மேலும், வெள்ள நீரில் ஆபத்தான பக்றீரியாக்கள் பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சு எச்சரிக்கை
இந்நிலையில், வெள்ள நீரில் நனைந்த உணவு வகைகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அழித்துவிடுமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவி வருவதாகவும் இது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்