குற்றக் கும்பலுடன் தொடர்புடைய காவல்துறையினருக்கு எதிராக நடவடிக்கை
நாட்டில் குற்றங்களைப் புரியும் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் காவல்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை அந்த அதிகாரிகளுக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்டத்தை நடைமுறைப்படுத்த தயங்கமாட்டேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றக் கும்பலின் தலைவர் ஹரக் கட்டா
குற்றக் கும்பலின் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவிற்கு ஆதரவாக செயற்பட்ட பல காவல்துறை உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 728 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 23 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்