குழந்தைகள் நல மருத்துவர் பெற்றோருக்கு விடுத்துள்ள கோரிக்கை!
குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா பெற்றோருக்கு விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.
அவ்வகையில், வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள் மரணிக்கலாம் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
'உலக எண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம்' குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,

“இதன் காரணமாக மனிதன் 50 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன.
எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, தேவையில்லாமல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம்.
ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டே நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை.” என வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்