இலங்கையில் அதிகரித்துள்ள சீனி பற்றாக்குறை!
இலங்கையில் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து, சீனி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சந்தையில் சீனியின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது ஒரு கிலோ வெள்ளை சீனி 320 ரூபாவுக்கும் சிவப்பு சீனி 370 ரூபாவுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சந்தை வட்டாரங்கள் கூறியுள்ளன.
சீனி விற்பனை
இந்த நிலையில், தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள பல கடைகளில் சீனி விற்பனை செய்யப்படுவதில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், விற்பனை செய்யப்படும் பகுதிகளில் ஒருவருக்கு ஒரு கிலோகிராம் மாத்திரம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சந்தையில் நிலவும் சீனி பற்றாக்குறை காரணமாக இனிப்பு வகைகள் மற்றும் பிஸ்கட் உற்பத்தியாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ச.தொ.ச மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக மக்களுக்கு நியாயமான விலையில் சீனி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |