வசந்த கரன்னாகொடவிற்கு எதிரான குற்றப்பத்திரத்தை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு
கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தை நீக்குமாறு சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நேற்று நிராகரித்துள்ளது.
வாய்மொழி மூல கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது என அறிவித்த நீதிபதிகள் சட்டமா அதிபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்தார்.
ங்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி லொஹான் அபேவிக்ரம தெரிவித்திருந்தார்.
விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் தொடர்புடைய பிரதிவாதி ஒருவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாயின் சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி அவரின் கையொப்பத்துடன் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
வாய்மொழி மூல கோரிக்கைக்கு தமது நீதிமன்றத்தால் அனுமதி வழங்க முடியாது என அறிவித்த நீதிபதிகள் சட்டமா அதிபரின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
குற்றப்பத்திரத்தை திருத்தி வழக்கின் ஏனைய 13 பிரதிவாதிகளுக்கும் எதிராக தொடர்ந்தும் வழக்கு விசாரணையை முன்னெடுக்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக நேற்றைய தினம் அரச சிரேஷ்ட சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து வழக்கை டிசம்பர் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சம்பா ஜானகி ராஜரத்ன அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.