மட்டக்களப்பின் சில பகுதிகளுக்கு முக்கிய அறிவிப்பு
மட்டக்களப்பில் சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (28) காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
உன்னிச்சை நீர் உள்ளெடுப்பு நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ்.ஜயந்தன் இன்று (26) தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், இருதயபுரம், மட்டக்களப்பு நகரம், கல்லடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுணதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய நீர் வழங்கல் திட்டங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் குறித்த காலப்பகுதியில் முழுமையாகத் தடைப்படும்.
முன்கூட்டிய சேமிப்பு
அதேவேளை, களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் மேற்கொள்ளப்படும்.

எனவே, குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த நீர் பாவனையாளர்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நீரை முன்கூட்டியே பெற்றுச் சேமித்து வைத்துக்கொள்வதுடன், நீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |