நாளைய விடுமுறை நாளில் கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
Water Cut
By Sumithiran
விடுமுறை தினத்தில் வெளியான அறிவிப்பு
கொழும்பு நுகேகொடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (04) 07 மணிநேர நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
நாளை இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (05) அதிகாலை 05.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வளங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
பலபகுதிகளுக்கு நீர் வெட்டு
இதனால், எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகன, மிரிஹான, மடிவெல, தலபத்பிட்டிய, உடஹமுல்ல, எம்புல்தெனிய, நுகேகொட மற்றும் பகொட ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.
ஹைலெவல் வீதியில் விஜேராமவில் இருந்து 7ஆம் மைல் வரையிலும், நுகேகொடையிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான அனைத்து இணைக்கப்பட்ட வீதிகளிலும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

மரண அறிவித்தல்