நீர்க் கட்டணத்தை செலுத்தாததால் அதிகரிக்கும் நிலுவை தொகை...!
நாடுதழுவிய ரீதியில் நீர்க்கட்டணம் செலுத்தத் தவறிய நுகர்வோரினால் நிலுவைத்தொகை அதிகரித்திருப்பதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நீர்க் கட்டணத்தை செலுத்தத் தவறியதால் 1450 கோடி ரூபா நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு நுகர்வோருக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் நிலுவைத் தொகை இன்னமும் செலுத்தி முடிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில் நீர் கட்டணத்தை செலுத்த தவறிய பலரது இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினைக் காரணமாக வைத்து நீர் பாவனையாளர்கள் உரிய நேரத்தில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதை தவிர்த்து வருவதாகவும் சபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |