மாரடைப்பு வராமல் தடுக்க உப்பை குறைத்தாலே போதுமாம்..!
சோடியம் நம்முடைய உடலுக்குத் தேவையான முக்கியமான மினரல் தான். ஆனால் நாம் எடுத்துக் கொள்ளும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றிலும் இருக்கும்.
அதைத் தவிர மிகக் குறைவாக சேர்த்துக் கொண்டாலே போதும். ஆனால் நாம் சோடியத்தின் தேவைக்காக உப்பை தான் அதிகமாக எடுத்துக் கொள்கிறோம்.
உப்பை எடுத்துக் கொள்வதை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நீங்கள் எடுக்கும் முதல் முயற்சி என்றே சொல்லலாம்.
சராசரியாக நம்முடைய உடலுக்குத் தேவைப்படும் உப்பின் அளவைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது உடலில் நிறைய ஆரோக்கியப் பிரச்சினைகள் உண்டாகலாம்.
அவை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளும்போது ரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
ரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய்களுக்குக் காரணமாகிவிடும்.
எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ளலாம்?
உணவில் உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனால் உப்பை மிகக் குறைந்த அளவில் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகிறது.
ஏனெனில் உலக அளவில் அதிகமாக இறப்பை ஏற்படுத்தும் நோய்களாக உயர் ரத்த அழுத்தமும் இதய நோய்களும் இருக்கின்றன என்று உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் படி, ஒரு நாளைக்கு 5-6 கிராமுக்கு மேல் உப்பு எடுத்துக் கொள்ளக் கூடாது.
அப்படி எடுத்துக் கொள்ளும்போது அவற்றின் கழிவுகளை வெளியேற்ற நம்முடைய சிறுநீரகங்கள் அதிகமாகப் போராடும்.
சோடியம் அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது எப்படி?
நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளைத் தவிர வேறு நிறைய விதங்களில் நாம் உப்பை எடுத்துக் கொள்கிறோம்.
அதனால் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவு அதிகரிக்கிறது. இதை தவிர்க்க கீழ்வரும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம்.
- லேபிள்களைப் படியுங்கள்.
- பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள்.
- காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் வகைகள், தானியங்கள் என எந்த வகை உணவாக இருந்தாலும் அதை முழு உணவுகளாக எடுத்துக் கொள்வது தான் நல்லது.
உப்புக்கு மாற்றாக என்ன செய்யலாம்?
நேரடியாக உப்பை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்த்துவிட்டு இயற்கையான உணவுப் பொருள்களையே நேரடி உப்புக்கு பதிலாக பயன்படுத்துவது நல்லது.
உப்பு நிறைந்த கெட்சப், மயோனைஸ், டிப் வகைகள் உள்ளிட்டவற்றைத் தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக வீட்டிலேயே கொண்டைக்கடலை போன்றவற்றைச் சேர்த்து செய்த ஹம்மூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
பிரெஞ்ச் ஃபிரைஸ் போன்றவற்றுக்கு பதிலாக அதே வடிவில் ஃபிரஷ்ஷான காய்கறிகளை நறுக்கி ஆவியில் வேகவைத்தோ, அல்லது பச்சையாகவோ எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி சாப்பிடும்போது இயல்பாகவே உப்பின் அளவு குறையும்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
20 மணி நேரம் முன்