“நாட்டுக்கு தேவையான 45 சட்டங்களை புதுப்பித்திருக்கிறோம்" நீதி அமைச்சர் தகவல்

Dr Wijeyadasa Rajapakshe Ranil Wickremesinghe Sri Lanka Sri Lanka Magistrate Court Ministry of justice Sri lanka
By Shadhu Shanker Dec 23, 2023 07:45 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

"இந்த சமூகம் அனைத்துதுறைகளிலும் சீரழிந்துவிட்டது, எனவே நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை புதுப்பித்திருக்கிறோம் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சில்இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றையதினம்(22) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் உரையாற்றுகையில், “இந்த சமூகம் அனைத்து துறைகளிலும் சீரழிந்துவிட்டது, இது ஓரிரு நாளில் நடந்ததல்ல. சமூக ஒளிபரப்பில் நீண்ட நாட்களாக நடந்து வந்த ஒன்று. தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

பம்பலப்பிட்டியில் கோர விபத்து: தொடருந்து மோதி இளைஞன் பலி

பம்பலப்பிட்டியில் கோர விபத்து: தொடருந்து மோதி இளைஞன் பலி

சமூகத்தின் நல்வாழ்வு

இந்த நிலையை மாற்றியமைக்கவே எங்களுக்கு தேவையாக இருக்கிறது.அதனால் நாங்கள் நாட்டை பொறுபேற்று கடந்த 15 மாதங்களில் நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான சுமார் 45 சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை புதுப்பித்திருக்கிறோம் எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்க்கிறோம்.

“நாட்டுக்கு தேவையான 45 சட்டங்களை புதுப்பித்திருக்கிறோம்" நீதி அமைச்சர் தகவல் | We Amended 45 Laws 15 Month Wijeyadasa Rajapakshe

கிராமமும் கோயிலும் என்ற கருத்து இப்போது மாறிவிட்டது. மற்ற மதங்களிலும் அப்படித்தான், பணத்தின் அடிப்படையிலான சமுதாயம் தான் இந்தக் காலத்தில் உருவாகி இருக்கிறது.

போதைப்பொருள் சமூகத்தை கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. இந்த சமூகத்தை நாங்கள் நல்வழிக்கு கொண்டுவர வேண்டும். அதனால்தான் நீதி அமைச்சு என்ற வகையில், சமூகத்தின் நல்வாழ்வுக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து வருகின்றோம்.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ஜனவரி 1 முதல் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: ஜனவரி 1 முதல் ஏற்படவுள்ள மாற்றம்

சமாதான நீதவான்

அதன் ஒரு கட்டமாக , சமுதாயத்திற்காக உழைக்கும் முன்மாதிரியான மற்றும் பொறுப்பான நபர்களுக்கு சமாதான நீதவான் பதவிகளை வழங்க நாங்கள் தீர்மானித்தோம்.

1978 நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் பிரகாரம் அதிபருக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

“நாட்டுக்கு தேவையான 45 சட்டங்களை புதுப்பித்திருக்கிறோம்" நீதி அமைச்சர் தகவல் | We Amended 45 Laws 15 Month Wijeyadasa Rajapakshe

நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதுபோன்று, நீதி அமைச்சருக்கு சமாதான நீதவான்களை நியமிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த நியமனங்களை நாங்கள் கண்டபடி வழங்க மாட்டோம். என்றாலும் கடந்த காலங்களில் தேவையற்ற நபர்களுக்கும் சமாதான நீதவான் நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

அவ்வாறான நபர்கள் சிலரின் நியமனங்களை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுத்தோம்”என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025