நாம் எந்நேரமும் தயார்! ஸ்ரீலங்கா விமானப் படை அறிவிப்பு
People
SriLanka
SriLanka Air Force
By Chanakyan
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயார்நிலையில் உள்ளதாக ஸ்ரீலங்கா விமானப் படை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, சீரற்ற காலநிலையினால் ஏற்படும் அனர்த்தங்களால் பாதிக்கப்படுபவர்களை மீட்பதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் 9 உலங்கு வானூர்திகளை தயார்நிலையில் வைத்துள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் சீரற்ற கால நிலை காணப்படுவதோடு, வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்