இலங்கையை போன்ற நிலை ஏற்பட வெகு தூரம் இல்லை -இம்ரான் கான் எச்சரிக்கை
Sri Lankan protests
Sri Lanka
Pakistan
Imran Khan
By Jaso
மாபியாக்களின் கொள்ளை மற்றும் சூறையாடல்களுக்கு எதிராக பொதுமக்கள் வீதிகளில் இறங்கும் ‘இலங்கை போன்ற தருணம்’ பாகிஸ்தானில் வெகு தொலைவில் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சனிக்கிழமை எச்சரித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவிலேயே மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சர்தாரி - ஷெரீப்களின் மாபியா நாட்டை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மண்டியிட வைத்து விட்டது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானைக் கொள்ளையடித்துச் சேர்த்த சட்டவிரோதமான சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காக. எனது கேள்வி என்னவென்றால்: அரசு நிறுவனங்கள் இதை எவ்வளவு காலம் தொடர்ந்து அனுமதிக்கும்? என அவர் கேள்வியெழுப்பி உள்ளார்.