தலிபான்களின் பாதுகாவலர் நாமே -மார் தட்டுகிறது பாகிஸ்தான்
pakistan
afghanistan
taliban
By Sumithiran
தலிபான்களின் பாதுகாவலர் தாமே என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஷேக் ராஷித் தெரிவிக்கையில்,
தலிபான்களுக்கு நீண்டகாலமாக பாகிஸ்தான்பாதுகாவலாக இருந்து வருகிறது . தலிபன்கள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு உறைவிடம், கல்வி உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பாகிஸ்தான் நிறைவேற்றி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
காபூலை தலிபன்கள் கைப்பற்றிய பிறகு அங்கு புதிய அரசை அமைப்பதில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும் என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ள நிலையில், தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவை அந்நாட்டின் உள்துறை அமைச்சர் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.