ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம் - வெளியான அறிவிப்பு (வீடியோ)
SJB
Sajith Premadasa
By Sumithiran
சஜித் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் துணை நிற்போம்.வாக்களித்த கட்சிக்கோ, தலைவருக்கோ, மக்களுக்கோ துரோகம் செய்ய மாட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார்.
பொலனறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமை எடுக்கும் தீர்மானத்தில் தான் நிற்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது அரசாங்கத்தில் இணையுமாறு கோரி அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் எழுதியுள்ளார்.இந்த நிலையில் சிலர் இணைய விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் மேற்கண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்