அனைத்தும் ஒரு வருடத்துக்குள் சீர் செய்யப்படும் - ஜீவன் தொண்டமான் வாக்குறுதி
பொருட்களின் விலையேற்றத்தால் மக்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது எனினும் இன்னும் ஒரு வருடத்துக்குள் நிலைமை சீர் செய்யப்படும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (jeevan thondaman) தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே பாதை காபட் ( KGK carpet road )இடப்பட்டு மக்கள் பாவனைக்கு நேற்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது மேலும் உரையாற்றிய அவர்,
"பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும். வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். இவ்விரண்டு விடயங்களையும் சிறப்பாக செய்துமுடித்தால் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தானாகவே நடக்கும் என தெரிவித்தார்.
நெருக்கடியான கால கட்டத்திலும் வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்ட வீதி அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.