எதற்கும் பயந்தவர்கள் அல்ல எம்மை வீழ்த்த முடியாது: மகிந்தவின் சகா இறுமாப்பு
நாங்கள் இரத்தபந்தம் கொண்டவர்கள்.தென்பகுதியில் பிறந்த நாங்கள் எதற்கும் பயந்தவர்கள் அல்ல. நாங்கள் விழவும் மாட்டோம், எங்களை வீழ்த்தவும் முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின்சில்வா(mervyn silva) தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை தங்காலை கால்டன் இல்லத்திற்கு பார்க்கச் சென்ற மேர்வின் சில்வா, ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மகிந்தவின் நிலையை பார்த்து கவலை
“டொனால்ட் ட்ரம்ப் 79 வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏன் முடியாது. மகிந்தவுக்கும் 79 வயது தான்.நாட்டை காப்பாற்றிய தலைவருக்கு இவ்வாறான நிலை கலையளிக்கிறது.
எனது மாமாவின் கேம்பிரிஜ் காரில் 1976 ஆம் ஆண்டு பெலியத்தவில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்னுடன் தான் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
அரசியல் வாழ்க்கை தொடர்பில் இன்று முடிவெடுக்க முடியாத நிலை
நன்றியுணர்வுள்ள மனிதனாக அவரை பார்க்க வந்தேன். மகிந்த ராஜபக்சவை நான் என்றும் குறை கூறியதில்லை. அவர் எடுக்கும் எந்த தீர்மானத்திற்கும் நான் தயாராக உள்ளேன். நாங்கள் பெலியத்தவில் ஒன்றாக தான் இருந்தோம்.எனது அரசியல் வாழ்க்கை தொடர்பில் இன்று முடிவெடுக்க முடியாத நிலை, எதிர்காலத்தில் பார்ப்போம்”
காணி கொள்வனவு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா தற்போது பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
