ஒருபோதும் அப்படி கூறவே இல்லை : பல்டி அடிக்கிறாரா அமைச்சர்..!
ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 162 ரூபா கமிஷன் முன்னாள் அமைச்சர் ஒருவரின் சட்டைப் பைக்கு செல்லும் என ஜனாதிபதியோ அல்லது தமது அரசாங்கத்தில் உள்ள எவரும் இதற்கு முன்னர் கூறவில்லை என வர்த்தக, உணவு, பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 102 ரூபா வரி விதிக்கப்படுவதாகவும், திறைசேரிக்கு கடனாக ஐம்பது ரூபா குறைக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அப்போது குறிப்பிட்டார்.
எரிபொருளின் விலை
கடன் தொகையை சேர்த்து ஒரு லீற்றர் எரிபொருளின் விலை தீர்மானிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர், கடந்த முறை இதே முறையிலேயே விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அநுராதபுரம்(anuradhapura) பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்ட அமைச்சர் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்குமென அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |