ராஜ்சோமதேவாவின் அறிக்கையை முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் : கொந்தளிக்கும் தரப்பு
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியானது இனப்படுகொலையின் மாபெரும் மனித புதைகுழியாக கண்டெடுக்கப்பட்டிருப்பதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் ராஜ்சோமதேவா சமர்ப்பித்த அறிக்கையை முற்று முழுதாக நிராகரிப்பதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டினர்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த மனிதப் புதை குழியிலே புதைக்கப்பட்டவர்கள் யார் என்பதை கேட்பதற்காக நாம் சர்வதேச நீதி கோரி தொடர்ச்சியாக போராடி வருகின்றோம்.
ராஜ்சோமதேவ முன்னர் சமர்ப்பித்த இரண்டு அறிக்கைகளுக்கும் முரணான அறிக்கையை இந்த முறை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கின்றார்.
அங்கு புதைக்கப்பட்ட உடல்கள், இயற்கை மரணங்கள் தொற்று நோய்களால் ஏற்பட்ட மரணங்கள் என்றும் சமய முறைப்படி அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றது என்றும் அவருடைய சொல்லப்பட்டிருக்கின்றது.
உண்மையாகவே அவருடைய அறிக்கையை நாங்கள் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம், வன்மையாக கண்டிக்கின்றோம். ஏதோ ஒரு வகையிலே இந்த மண்ணில் வாழ்ந்த, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட ஒரு தமிழ் மகன் அங்கு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி, சதோஷ மனித புதை குழிகளை இதே ராஜ்சோமதேவ ஒரு சில காரணங்களை காட்டி பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லியதால் மூடப்பட்டிருக்கின்றது.
அதேபோன்று இன்று இந்த செம்மணி மனித புதைகுழியையும் மூடுவதற்கான ஆயத்த பணிகளை செய்கின்றார் என்றுதான் சொல்ல முடியும்.
இலங்கை அரசாங்கத்தின் ஒரு பேராசிரியராக இருக்கின்ற ஒரு ஆய்வாளர், தனது இனத்தையும் தனது அரசையும் காப்பாற்றுகின்ற ஒரு நோக்கத்திற்காகவோ செயற்படுகிறார் என்பதை இந்த அறிக்கை எங்களுக்கு தெட்ட தெளிவாக சொல்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |