எண்ணெய் விலை உயர்வு! எதிர்க்கட்சி நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
SJB
SriLanka
J C Alawatuwala
Gurunagala
By Chanakyan
எண்ணெய் விலை அதிகரிப்பை எதிர்த்து குருநாகல் நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல அவர்களின் ஏற்ப்பாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முந்திரம் நள்ளிரவு முதல் அரசாங்கம் எரிபொருட்களுக்கான விலையினை அதிகரித்துள்ளது.
இதனால் நாட்டு மக்களின் மீது பொருளாதார சுமை ஏற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்